×

நாளை தமிழகம் வரும் மத்தியக்குழுவினர் புயல் பாதித்த பகுதிகளில் 3 நாட்கள் ஆய்வு: முதல்வர் பழனிசாமி பேட்டி

டெல்லி: தமிழக புயல் பாதிப்பை மத்திய குழு 3 நாட்கள் ஆய்வு செய்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பேட்டியளித்தார். புயல் சேத படங்களை பார்த்தவுடன் பிரதமர் மத்திய குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது. பின்பு அந்த குழு வந்த பின்பு அவர்களுடன் கலந்து பேசி எந்தந்த இடத்த்திற்கு அவர்கள் செல்வார்கள் என்பதல்லாம் பின்பு திட்டமிடப்படும். பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அவர்கள் சமர்ப்பிப்பார்கள். நிவாரண நிதியானது மக்களுக்கு ஆளுநர் மூலம் கிடைத்தாலும் வரவேற்கத்தக்கது. மேலும் அனைத்து தரப்பு மக்களும் தங்களால் முயன்ற அளவுக்கு பாதிக்க்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலையில் பிரதமரை சந்தித்து தமிழகத்தில் கஜா  புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களை பிரதமரிடம் எடுத்துக் கூறி, புயல் நிவாரணமாக 15000 கோடி வழங்க வேண்டும் என கூறியிருக்கிறோம். இப்போது இடைக்கால நிவாரணமாக உடனடியாக 1500 கோடி ரூபாய் வழங்கும்படி கேட்டுக்கொண்டோம். மேலும் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, சேத விவரங்களை உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில்  நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். உடனடியாக மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறியிருக்கிறார். கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

புயல் மழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை பார்த்து தான் இவ்வளவு நடந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைக்கின்றார்கள் இதனால் தான் கோரிய தொகை கிடைக்கும் என நம்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பேட்டியளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,Palani Basu ,storm ,areas ,Coimbatore , Tamilnadu, Central Committee, Storm affected area, 3 days, study
× RELATED மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர்...